பார்சல் கேட்பார்கள்.. காசு கேட்டால் பாக்ஸிங் செய்வார்கள்.. பிரியாணி கடைக்காரரிடம் பிரியமாய் பேசிய ஓபிஎஸ்

பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் ‘பாக்சிங்’ குத்து விடுகிறார்கள் அதனால் நிம்மதியாக இருக்க அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சென்னை பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது;

அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தொழிலுக்கும் இடையூறு இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான் உங்களுக்கு நிம்மதி இருக்கும். நல்லது நடக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.தி.மு.க. ஆட்சியில் இந்த நிம்மதி இருக்குமா? பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் ‘பாக்சிங்’ செய்து தாக்குகிறார்கள். பெண்கள் என்று பாராமல் பியூட்டி பார்லரில் அடிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Read more – இலவச திட்டங்களை வழங்கும் இரு கட்சிகள்… தமிழகம் கடனில் தத்தளிக்க இவர்களே சாட்சிகள்… திராவிட கட்சிகளை வெளுத்துவாங்கிய டிடிவி

மேலும், ஆட்சிக்கு வராதபோதே தி.மு.க.வினர் இத்தனை அட்டூழியங்களை செய்கிறார்கள். எனவே பிரியாணி கடைக்காரர்கள் மற்றும் பிற கடைக்காரர்கள் யோசித்து பார்த்து ஓட்டு போடுங்கள் மக்களே. பழைய சம்பவங்களை எல்லாம் யோசித்து பார்த்து வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version