சட்டமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
சென்னை :
வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மருத்துவப்படிப்பு மாணவர்களுக்கு தமிழக படத்திட்டத்திலிருந்து சீட்( SEET ) என்ற தேர்வு நடத்தப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உருவாக்க என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை பின்வருமாறு;
*மக்கள் நலன் காக்கும் மக்களாட்சி
*தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 15-20% வளர்ச்சியை உறுதி செய்து 60-70 லட்சம் கோடியாக உயர்த்துவோம்.
*வேலைவாய்ப்பை உறுதி செய்து தனி நபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தப்படும்.
*அனைவருக்கு சுத்தமான குடிநீர் – நீலப்புரட்சி
*இயற்கையும் அறிவியலும் சார்ந்த நிரந்தர பசுமைப்புரட்சி, விவசாய பொருட்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் – ஏற்றுமதி வரை உலக சந்தைமயமாக்கல்,
*மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி
*ஸ்மார்ட் வில்லேஜ் – அப்துல்கலாம் புரா திட்டம்
*மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு, அரசுப்பள்ளிக்கல்வி உலகத்தரத்தில் மேம்பாடு
*உலகத்தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு
*தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் எம்.பி.பிஎஸ் படிப்பிற்கு சீட்(SEET)
மேலும், 8 சிறப்புமிக்க திட்டங்களை வெளியிட்டுள்ளார்.