அமமுகவின் 63 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ற ஒரு சேர ஒற்றை முழக்கத்துடன் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 63 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,
- தமிழகத்தில் இனிமேல் மதுபான ஆலைகளுககு அனுமதியில்லை, படிப்படியாக குறைய நடவடிக்கை.
- அம்மா பொருளாதார புரட்சித் திட்டம் என்ற பெயரில் வீட்டில் ஒருவருக்கு வேலை.
- நெல் ஒரு குவிண்டாலுக்கு 3000 மற்றும் கரும்பு ஒரு டன்னுக்கு 4000 வரை வழங்கப்படும்.
- உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் மானியத்துடன் விவசாயிகளின் வீடு தேடி வழங்கப்படும்.
- அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
- மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் 50 சதவிகிதம் கட்டணச் சலுவை.
- கிராமப்புறத் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்க 5 பொறியியல் பட்டதாரிகள் இணைந்த குழு ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கடன்.
- மாதம் ஒரு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் நேரடியாக பங்கேற்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
- அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கப்படும். குறைந்தபட்சம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் தோறும் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படும்.
- மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும்.
போன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.