ஸ்டாலின் முதல்வர் கனவு கடைசி வரை கனவாகவே போய்விடும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
ஆளும் கட்சிகள் முதல் எதிர் கட்சிகள் வரை தொடர் பிரச்சாரம் மற்றும் நல்ல திட்டங்கள் அறிமுகம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ற ஒற்றை முழக்கத்துடன் தங்களது ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
Read more – அரசியல் குழப்பங்கள் நிகழும் புதுச்சேரி.. அதிகாரத்துடன் இன்று வருகை தரும் ராகுல் காந்தி…
இந்தநிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாகத்தான் இருக்கும். அது ஒரு போதும் நனவாகாது. திமுக ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயரும், மின்வெட்டு நேரம் அதிகரிக்கும். ரவுடிகளின் ராஜ்ஜியம் தலைதூக்கும் என்பது மக்களுக்கே நன்றாக தெரியும். இதனால் திமுக கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.