வரும் சட்டமன்ற தேர்தலில் யாரெல்லாம் தபால் ஓட்டின் மூலம் வாக்களிக்கலாம் என்ற விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக தேர்தல் குறித்த பாதுகாப்பில் ஏற்கனவே துணை ராணுவம் வந்தநிலையில், அடுத்தடுத்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, வரும் சட்டமன்ற தேர்தலில் யாரெல்லாம் தபால் வாக்கினை செலுத்தலாம் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.
Read more – மொத்த வேட்பாளரையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் சீமான்.. அதிர இருக்கும் ராயப்பேட்டை
அதில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனாவால் பாதித்தவர்கள் தபால் மூலமாக வாக்களிக்கலாம் என்றும், பணியில் உள்ள ரயில்வே பணியாளர்கள், கப்பல் பணியாளர்கள், விமான பணியாளர்கள், ராணுவ ஊழியர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.