தமிழக சட்டசபை தேர்தல் : இணைத்தேர்தல் அதிகாரிகள் புதிதாக நியமனம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதிதாக இணைத்தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை :

தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், கூடுதலாக 2 இணை தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்துறை இணை செயலாளராக பதவி வகித்த ஆனந்த் ஐ.ஏ.எஸ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read more – புதுச்சேரியில் கால் பதிக்கும் தமிழிசை… 31 வது துணை நிலை ஆளுநராக பதவியேற்பு..

அதேபோல் சுகாதாரத்துறை இணை செயலாளராக பதவி வகித்த அஜய் யாதவ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version