மாமனாருக்காக ஓட்டு சேகரிக்கும் மருமகள்… சாதனைகளை சரமாரி விளக்கி தேர்தல் பிரச்சாரம்…

தேனி, போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வத்திற்காக ஆதரவாக அவரது மருமகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

போடி :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.

Read more – சுயேட்சையாக களமிறங்கும் பிரபல இயக்குனர் : பலாப்பழ சின்னத்தில் போட்டி

இந்தநிலையில், அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் ஓ.பன்னீர் செல்வம் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து, தமிழகத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பிற வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால் இவருக்கு ஆதரவாக இவரால் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை.

இதனால், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது மகன்களான ரவீந்திர நாத் எம்.பி மற்றும் ஜெய பிரதீப் ஆகியோர் தந்தைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது மாமனாருக்கு ஆதரவாக ரவீந்திரநாத் மனைவி ஆனந்தியும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தனக்கு ஆதரவாக இருக்கும் பெண்களை அழைத்துக்கொண்டு காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் ஆனந்தி இரவு வரை வாக்கு சேகரிக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தனது மாமனார் செய்த சாதனைகளை கூறி, புள்ளி விவரத்துடன் அடுக்கி அசத்தி வருகிறார்.

Exit mobile version