திமுக எத்தனை இடங்களில் போட்டி : வெளியான புதிய தகவல்

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் 174 வேட்பாளர்கள் தனித்து போட்டியிட இருக்கின்றனர்.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

ஆளும் கட்சிகள் முதல் எதிர் கட்சிகள் வரை தொடர் பிரச்சாரம் மற்றும் நல்ல திட்டங்கள் அறிமுகம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ற ஒற்றை முழக்கத்துடன் தங்களது ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்தநிலையில், திமுக கூட்டணி சார்பாக உதயசூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர். அதில் திமுக சார்பாக போட்டியிட 174 வேட்பாளர்களும், கூட்டணி கட்சி சார்பாக 13 வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கிறார்கள்.

Read more – தேமுதிக அதிரடி ஆட்டம்… அதிமுக கூட்டணியில் இருந்து ஓட்டம்….

மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மொத்தம் 60 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 6 இடங்களும்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கி இருக்கிறது.

இதனால், உதய சூரியன் சின்னத்தில் சில கூட்டணி கட்சிகள் போட்டியிட ஒப்பு கொண்டுள்ளதால் தி.மு.க 187 இடங்களில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்களே போதுமானதாக கருதப்படுகிறது.

Exit mobile version