பொய்யான வாக்குறுதி அளித்து அதிமுக தமிழகத்தை வெல்ல நினைக்கிறார்கள் : கனிமொழி

அதிமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது என்று தூத்துக்குடி எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

கரூர்:

வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று கனிமொழி எம்.பி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது அவர் கூறியதாவது;

அதிமுக தொடர்ச்சியாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தல் பிரச்சாரம் செய்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க நினைக்கிறது. இதனை மக்களாகிய நீங்கள் ஒருபோதும் நம்ப வேண்டாம். தி.மு.க. அறிவித்துள்ள சிறப்பான தேர்தல் அறிக்கை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Read more – மக்கள் நீதி மய்யத்தின் மற்றொரு தொகுதி வேட்பாளருக்கும் கொரோனா தொற்று… அதிர்ச்சியில் தொண்டர்கள்…

மேலும், கடந்த ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்தபோது இந்த பகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக ஆட்சி அமைய மக்களாகிய நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version