சென்னை தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை போல் பேசி டிடிவி தினகரன் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை :
சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா, சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. எங்கு சென்றாலும் அவர்களின் திருவுருவகொடி கம்பீரமாக பறந்து கொண்டிருக்கின்றது.
நான்கு வருடமாக ராஜதந்திரம் என்கின்ற பெயரில் இயங்கும் ஆட்சி, அதிகாரத்தில் மேலே இருக்கின்றவர்கள் தயவில் நடக்கும் ஆட்சி, இது நாங்கள் அமைத்துக் கொடுத்த ஆட்சி. திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் செய்வதே எங்களது ஒரே நோக்கம். அதற்காக அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
Read more – மீனவர்களுக்காக மீண்டும் தனி அமைச்சகமா ? ராகுல் காந்தியை கேள்விகேட்கும் மத்திய அமைச்சர்
பாண்டிச்சேரியில் நாராயணசாமி அண்ணா ஆட்சி நன்றாகவே நடத்திக்கொண்டிருந்தார். ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை விட்டு விலகினார். எப்பொழுதும் பிஜேபி கவுக்கதான் செய்வார்கள். ஒரு தி.மு.க எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். காரணமென்ன என்று யாரும் அதைப் பற்றி பேசுவது கிடையாது.
சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களை பாதுகாப்போம் என்று திமுகவினர் சொன்னார்கள் என்று அனைவருக்கும் தெரியும் என்று திமுக தலைவர் ஸ்டாலினை போல் பேசி டிடிவி தினகரன் கிண்டல் செய்துள்ளார்.