வாக்களிக்க வேண்டுமா ? இலவசமாக பயணம் மேற்கொள்ளுங்கள்… அதிரடி சலுகை வழங்கிய உபர்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இலவச பயணம் வழங்க உபர் நிறுவனம் முன்வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நேற்று இரவு 7 மணியுடன் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். இதையடுத்து, நாளை பொதுவிடுமுறையை அறிவித்த தமிழக அரசு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கவும் உத்தரவிட்டது. இதனால் வெளியூரில் இருந்து பல வாக்காளர்கள் சொந்த ஊர்களை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வாக்களிக்க வருகை தரும் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம் வழங்க ஊபர் நிறுவனம் முன்வந்துள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்துடன் உபர் இணைந்து சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு அன்று இலவச பயணம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Read more – உதயசூரியன் உதயமாகட்டும்… தமிழகத்திற்கு விடியல் கிடைக்கட்டும்… திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்வீட்

இதன்படி, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விருப்பத்தின் பேரில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், இதற்கு கைபேசியின் மூலம் ஊபர் செயலி வழியாக இலவச சவாரிக்கு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர்கள் வீட்டிலிருந்து வாக்குச்சாவடி சென்று திரும்பும் வகையில் இலவச சவாரியானது குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்திற்குள் இருக்க வேண்டும், பயண கட்டண அளவில் 200 ரூபாய் வரை 100 % கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version