தனது வீடு முகவரியை பிரச்சாரக்கூட்டத்தில் தெரிவித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரெய்டு வரும்படி வருமான வரித்துறையினருக்கு சவால் விடுத்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெரும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் மற்றும் உடைமைகளை கைப்பற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் மகளும், உதயநிதி ஸ்டாலின் சகோதரியுமான செந்தாமரை – மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 8 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் வருமான வரித்துறையினர் எதுவும் கிடைக்காமல் சென்றாக கூறப்படுகிறது.
Read more – இன்றைய ராசிபலன் 03.04.2021!!!
இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டபோது ரெய்டு குறித்து சவால் விடுத்தார். அதில், எனது சகோதரி வீட்டிற்கு ரெய்டு அனுப்பி எங்களை மிரட்ட பார்க்கிறார்கள். இதற்கு நாங்கள் பயப்படப்போவதில்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால் என் வீட்டில் ரெய்டு நடந்துகள் பாப்போம் என்று தனது விலாசத்தை அவர் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் திமுக தொண்டர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.