தலைதூக்குகிறதா வாரிசு அரசியல்… தேர்தலில் களமிறங்கும் அடுத்த பிரபலத்தின் மகன்…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் சாத்தூர், கோவில்பட்டி தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னை :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு குறித்த விஷயத்தில் திமுக ஏற்கனவே தொகுதியை பிரித்த நிலையில், அதிமுக உள்பட பிற கட்சிகள் கூட்டணி இழுபறியில் இருந்து வருகிறது. மேலும் வேட்பாளர் பட்டியலும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், திமுக கூட்டணி அமைத்துள்ள மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எந்த தொகுதிகளில் யார் போட்டியிட போகிறார்கள் என்ற விவரம் இன்று (மார்ச்.10 ) வெளியிடப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. தற்போது வைகோவின் மகன் துரை வையாபுரி சாத்தூர் அல்லது கோவில்பட்டி தொகுதிகளில் போட்டியிட வைகோவிடம் வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read more – திமுக எத்தனை இடங்களில் போட்டி : வெளியான புதிய தகவல்

இதற்கு வைகோ மறுத்துவிட்டதாகவும், மதிமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்த பின்னரே வைகோவின் மகன் போட்டியிடுவாரா ? மாட்டாரா ? என்ற முடிவு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version