அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா தேமுதிக ? மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் நாளை அவரச ஆலோசனை

அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் நாளை அவரச ஆலோசனை நடத்த இருக்கிறார்.

சென்னை :

அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் நாளை அவசர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. நேற்று இரவு சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திலும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்திலும் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ளார்.

பாமக மற்றும் பா.ஜ.க போன்ற கட்சிகளுக்கு 20 தொகுதிகளுக்கு மேல் வழங்கப்பட்டதை போல் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மேலும், தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read more – புதுச்சேரி தேர்தல் பயத்தில் பா.ஜ.க : ரங்கசாமியுடன் கூட்டணி வைக்க குட்டிக்கரணம் அடிக்கும் அமித்ஷா

அதிமுக கட்சி தேமுதிகவிற்கு 20 தொகுதிகளுக்கு மேல் வழங்கினால் யார் யார் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது ? தொண்டர்களின் கட்சி பணி போன்ற முக்கிய அறிவிப்புகளை பகிர்ந்து அளிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தவறாமல் கலந்துகொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version