விஜயகாந்த் என்ன பாவம் செய்தார், தேமுதிகவிற்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று விஜயபிரபாகரன் கதறி அழுது கண்ணீர் வடித்தார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
அதேபோல், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக கட்சி அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தநிலையில், தேமுதிக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை ஆதரித்து விஜயபிரபாகரன் பரப்புரை மேற்கொண்டபோது கூறியதாவது;
Read more – நடிகர் ரஜினிகாந்திற்கு “தாதா சாகேப் பால்கே விருது” – முதல்வர், கமல்ஹாசன் வாழ்த்து
அதிமுக, திமுக போன்ற காட்சிகள் மக்களின் பிரசாரணை குறித்து இதுநாள் வரி பேசவில்லை. இரு கட்சிகளும் மாறி மாறி அவர்கள் செய்த குறைகள் மற்றும் ஊழல்களை பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அவர்கள் அளித்த வாக்குறுதி ரூ. 1000, 1500 பணத்திற்காக மட்டும் சிந்தித்து ஓட்டு போடாதீர்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு வரும் அறிவித்தவர் விஜயகாந்த் மட்டும் தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜயகாந்த் என்ன பாவம் செய்தார், தேமுதிகவிற்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று விஜயபிரபாகரன் கதறி அழுது கண்ணீர் வடித்தார்.