செய்யாறு தொகுதியில் வேட்பாளரை மாற்று…. இல்லையெனில் போய்டுவ தோற்று…. போஸ்டர் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்த தொண்டர்கள்

செய்யாறு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டிவருகின்றனர்.

திருவண்ணாமலை :

கடந்த வாரம் அதிமுக சார்பில் சென்னை தலைமை கழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தூசி கே.மோகன் அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் செய்யாறு, வெம்பாக்கம் அடுத்த மாங்கால் கூட்டுச்சாலையில் அதிமுக தொண்டர்கள் இவர் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 ம் தேதி முதல் 14 ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தூசி கே.மோகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து மீண்டும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் இவர் வரும் வழியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Read more – நாட்டில் மழை தண்ணி இல்லாம பஞ்சம், பட்டினி…. 17 நாட்களில் 111 கோடியை பிடித்த தேர்தல் அதிகாரி கூட்டணி…

அதில், செய்யாறு தொகுதி அதிமுக தொண்டர்களின் மனக்குமுறல் இது, தூசி கே.மோகன் தவிர வேறு எந்த வேட்பாளர் நின்றாலும் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அச்சிடப்பட்டு இருந்தது. இதையறிந்து வந்த தூசி கே.மோகன் ஆதரவாளர்கள் போஸ்டரை கிழித்து எரிந்து அப்புறப்படுத்தினர்.

Exit mobile version