தமிழகத்தில் சாக்கடையாகி போன அரசியலை சுத்தம் செய்ய வந்த துப்புரவு தொழிலாளிகள் நாங்கள் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சிங்காநல்லூர் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில், கோவை சிங்காநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது; 60 ஆண்டுகளாக என்னை நட்சத்திர அந்தஸ்து வைத்திருந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்திருக்கின்றேன். பலர் நான் அரசியல் களம் காண போகிறேன் என்று கூறும்போது அது ஒரு சாக்கடை என்று தடுத்தார்கள்.
Read more – மாமனாருக்காக ஓட்டு சேகரிக்கும் மருமகள்… சாதனைகளை சரமாரி விளக்கி தேர்தல் பிரச்சாரம்…
ஆனால், அது மக்களுக்காக செய்யும் வேலையை சாக்கடையில் இறங்கி செய்ய வேண்டுமானால் அதையும் செய்யலாம் என நாங்கள் இறங்கியிருக்கின்றோம், தமிழகத்தை துப்புரவு செய்ய வந்த துப்புரவு தொழிலாளிகள் நாங்கள், எங்களை தலைவர்களாக பார்க்கவில்லை, எங்களை கருவிகாளாக்கி கொள்ளுங்கள் என தெரிவித்தார்.