அதிமுகவில் வேட்பாளர் விருப்ப மனு தாக்கல் : 24 ம் தேதி முதல் பதிவு செய்ய கட்சி அழைப்பு

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 24 ம் தேதி விண்ணப்ப மனு அளிக்கலாம் என்று முதல்வர், துணை முதல்வர் அறிவித்துள்ளனர்.

சென்னை :

தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் மே மாதம் 24 ம் தேதி முடிவடைய உள்ளதால் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக கட்சி முதல் வியூகத்தை அமைத்துள்ளது. அதன்படி, அதிமுகவின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகிற 24 ம்தேதி (புதன்கிழமை) முதல் மார்ச் மாதம் 5 ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பதிவு செய்து கொள்ளலாம் என்று முதல்வர், துணை முதல்வர் அறிவித்துள்ளனர்.

Read more – சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வு.. பொதுமக்கள் கடும் அயர்வு..மத்திய அரசின் மீது கமல்ஹாசன் காட்டம்

மேலும், தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க கட்டணமாக ரூ.15 ஆயிரம் கட்டவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version