4 புதிய TCL ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் : 43-இன்ச் டூ 65-இன்ச்

4 புதிய TCL ஸ்மார்ட் டிவிகள் 43-இன்ச் டூ 65-இன்ச் வரை அறிமுகமாகியுள்ளது.

டி.சி.எல் நிறுவனம் இந்தியாவில் அதன் மலிவு விலையிலான லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவி மாடல்களை கொண்ட பி 725 4 கே எச்டிஆர் எல்இடி டிவி சீரிஸை (TCL P725 4K HDR LED TV series) அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில், ஆண்ட்ராய்டு டிவி 11 கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட் டிவிகளாக இருக்கும் என்று டிசிஎல் நிறுவனம் கூறியுள்ளது. புதிய டிவி தொடர் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என்கிற நான்கு அளவுகளில் வாங்க கிடைக்கும்.

இந்தத் தொடரில் உள்ள அனைத்து டிவிகளும் 4 கே எச்டிஆர் எல்இடி டிவிகள் ஆகும் மற்றும் டால்பி விஷன் எச்.டி.ஆர் மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பங்களுக்கான ஆதரவுடன் வருகிறது.4 புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களுடன் சேர்த்து இந்நிறுவனம் தனது ஒக்கரினா ஸ்மார்ட் ஏசி தொடரையும் (Ocarina Smart AC series) நாட்டில் அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ.33,990 முதல் தொடங்குகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, டி.சி.எல் பி 725 சீரிஸ் மொத்தம் நான்கு அளவுகளில் கிடைக்கிறது, ரூ.41,990 க்கு 43 இன்ச் மாடலும், ரூ 56,990 க்கு 50 இன்ச் மாடலும், ரூ.62,990 க்கு 55 இன்ச் மாடலும் மற்றும் மிகப்பெரிய 65 இன்ச் மாடலானது ரூ.89,990 க்கும் வாங்க கிடைக்கும். டி.சி.எல் இந்த நான்கு டிவி வகைகளையும் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள நிலையில், 65 இன்ச் டிவி மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும், அது அமேசான் வழியாக வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரீமிங் சேவைகளான நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஆண்ட்ராய்டு டிவிக்கான கூகுள் பிளே ஸ்டோர் மூலம் 7,000 க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் மற்றும் கேம்களுக்கு இந்த Android டிவி அணுகலை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவிகளில் உள்ளமைக்கப்பட்ட Chromecast உள்ளது. தவிர, டிசிஎல் பி 725 தொடரில் டால்பி விஷன் தரநிலை வரை டால்பி அட்மோஸ் ஆடியோவுடன் எச்டிஆருக்கான ஆதரவும் உள்ளது.TCL P725 ஸ்மார்ட் டிவிகளின் முக்கிய அம்சங்களாகக் கூறப்படுகின்றன.

Exit mobile version