சிக்கல்களை தாண்டி பயன்பாட்டுக்கு வந்தது சிக்னல்!

சிக்னல் செயலி பல்வேறு சிக்கல்களை தாண்டி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வாட்ஸப்பின் புதிய பிரைவசி பாலிசிகளுக்கு பிறகு சிக்னல் செயலி பயனாளர்களிடையே பரவலான கவனம் பெற்று அதிக அளவில் தரவிறக்கமும் செய்யப்பட்டது.

இதன் காரணமாக சிக்னல் செயலியில் பல மணி நேரம் இடையூறு ஏற்பட்டு பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பல லட்சம் பயனாளர்கள் சிக்னல் செயலிக்கு மாறியதால் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக சிக்னல் செயலி தெரிவித்துள்ளது.

READ MORE- ஏர்டெல்லின் ப்ராட் பேண்ட் பயனாளர்களுக்கு அசத்தல் சேவை!

பல மணி நேர இடையூறுகளுக்கு பிறகு தற்போது சிக்னல் செயலி இயங்க ஆரம்பித்தாலும் சீராக இயங்கவில்லை சேவையில் குறைபாடு இருக்கிறது எனவும் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த அப்டேட்டில் பயனர்களின் குறைபாடுகள் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Exit mobile version