மீண்டும் உயரும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் விலை..!!

airtel prepaid
Gopal Vittal

ஒவ்வொரு பயனரிடம் இருந்து ரூ. 200 வசூலிக்கும் பொருட்டு ஏர்டெல் நிறுவனம் தனது ஃப்ரீபெய்டு திட்டங்களுக்கான விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

கடந்தாண்டு நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான விலையை அதிகரித்தன.

தற்போது மீண்டும் விலையை உயர்த்த உள்ளதாக ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். 5ஜி ரிசர்வ் விலை குறைப்பு இருந்தபோதிலும், அது போதுமானதாக இல்லை என தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் விலை குறைவாகவுள்ளது போல தோன்றுகிறது. ஒரு பயனரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வசூலிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களே என்று விட்டல் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version