அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட் வாட்ச் முன்பதிவு துவங்கியது!

இந்திய சந்தையில் அமேஸ்ஃபிட் ஜிடிஆர்2 ஸ்மார்ட் வாட்ச்சிற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த மாதம் 17ம் தேதி ஹூவாமி நிறுவனம் ஜிடிஆர் 2  ஸ்மார்ட் வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதை முன்பே அறிவித்து இருந்தது.

தற்போது அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பதிவு அமேஸ்ஃபிட் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் இந்த மாதம் 17ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஸ்போர்ட்ஸ் எடிஷன், அலாய் அலுமினியம் கேஸ், சிலிக்கான் ஸ்டிராப் வெர்ஷன்களில் இது கிடைக்கிறது. முன்பதிவு செய்வோருக்கு மாற்றி கொள்ள கூடுதலாக ஒரு ஸ்டிராப் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

READ ALSO- சிறந்த கேமிங் அனுபவத்திற்கு புது செயலி அறிமுகப்படுத்திய சாம்சங்!

சிலிகான் ஸ்டிராப் வெர்ஷனின் விலை ரூ. 12,999 எனவும், கிளாஸிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் ஆகியவற்றின் விலை ரூ. 13, 499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version