“ஆண்ட்ராய்டு 11” ஸ்மார்ட் போன் வாங்க வந்தா சாக்லெட்டும், கேக்குமா இருக்கு!

ஆண்ட்ராய்டு தளம் புதிய அப்டேட் டை கூகுள் வெளியிட்டுள்ளது. அதன் பெயர் அனைவரும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.ஆண்ட்ராய்டு version கடந்து வந்த பார்வையை பார்ப்போம்.

2ஜி யிலுருந்து 3ஜி க்கு மாறியவுடன் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்தது. ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்டு போன்ற தளத்தில் போன்கள் வர ஆரம்பித்தன. இதில் சில குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு விண்டோஸ் தளம் தன் பயன்பாட்டை நிறுத்திக்கொண்டது. இப்போது ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு தளம் களத்தில் உள்ளது. பொதுவாக அதிக மக்கள் ஆண்ட்ராய்டு தளத்தை பயன்படுத்துகின்றனர்.


ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்கள் தங்களை புதுப்பித்து கொள்ள ஒவ்வொரு அப்டேட்களை செய்கின்றன அதில் ஆண்ட்ராய்டு தளம் வைக்கும் பெயர்தான் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. அதன் பெயர்கள் நாம் விரும்பி உண்ணும் சாக்லேட் மற்றும் கேக்களின் பெயர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அப்டேட் மற்றும் அவற்றின் சுவாரஸ்யமான பெயர்களை இப்போது பார்ப்போம்.


முதலாவதாக ஆண்ட்ராய்டு முதல் தளத்தின் பெயரே அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது .2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வெர்சினின் பெயர் “கப் கேக் “. இதன் பெயரை கேட்கும் போதே அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊரும். 1.5 ஆண்ட்ராய்டு தளத்தில் இது செயல் பட்டது.


அடுத்த அப்டேட்டும் கேக் சம்மந்தமாக இருந்தது. 1.6 ஆண்ட்ராய்டுக்கு அவர்கள் வைத்த பெயர் “டோனட்”. இந்த அப்டேட் 2009 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகபடுத்தப்பட்டது.

அடுத்த வெர்சனுக்கு எந்த கேக்கின் பெயர் வைக்க போகிறார்கள் என இருதவர்களுக்கு ஆச்சிரியம் தான். இப்போது ஆண்ட்ராய்டு 2.1க்கு வைத்த பெயர் “eclair” என்ற சாக்லேட்டீன் பெயரை வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

ஆண்ட்ராய்டு 2.2 வரை “eclair” என்ற “version”யை தொடர்ந்த ஆண்ட்ராய்டு, தன் அடுத்த version ஆன 2.3 க்கு அமெரிக்கா மக்கள் கிறிஸ்துமஸ் சமயத்தில் விரும்பி உண்ணும் “ஜின்ஜர் பிரட்”

அடுத்த version ஆண்ட்ராய்டு 3.0 டேப்லெட்டுகாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, தேனீக்களை சிறப்பிக்கும் விதமாக “ஹனிகாம்ப்”என பெயரிடப்பட்டது.

ஆண்ட்ராய்டு “4.0 version” பொதுவாக இந்த தளத்தில் இருந்து தான் ஆண்ட்ராய்டு தளம் மிக பிரபலம் ஆனது என்று சொல்லலாம். ஏன் என்றால் இந்த கால கட்டத்தில் தான் மலிவு விலை ஆண்ட்ராய்டு போன்கள் நிறைய அறிமுக படுத்தப்பட்டன. இதற்கு அவர்கள் வைத்த பெயர் ஐஸ்கிரீம் சண்ட்விச்.

ஆண்ட்ராய்டு 4.1 முதல் 4.3 வரை அவர்கள் வைத்த பெயர் “ஜெல்லி பீன்” இந்த பெயர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி மிட்டாய் பெயர் கொண்டதால் குழந்தைகளிடையே இந்த பெயர் மிக பிரபலம் பெற்றது.

தொடர்ந்து ஆண்ட்ராய்டு 4.4 என்ற “version”னும் வந்தது. அதற்கு அவர்கள் வைத்த பெயர் “கிட்காட்”. இந்த காலகட்டத்தில்

ஆண்ட்ராய்டு போன்களின் வடிவம் பெரியதாக இருந்ததோடு, சீன நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபலம் ஆகின. இதற்கு அவர்கள் வைத்த பெயர் “லாலிபாப்” ஆண்ட்ராய்டு 5.0 முதல் 5.1.1 தளம் வரை இயங்கின.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ஆண்ட்ராய்டு 6.0 என்ற தளம் வந்தது இதற்கு அவர்கள் வைத்த பெயர் “ஸ்வீட் மார்ஷ்மெல்லொவ்

“. அடுத்த தளமான ஆண்ட்ராய்டு 7.0 க்கு அவர்கள் வைத்த பெயர் “நௌகட்”

ஆண்ட்ராய்டு 8.0 இந்த தளத்திற்கு பிஸ்கட்டீன் பெயர். அதுவும் அந்த காலகட்டத்தில் பிரபலமான “ஓரீயோ”என்ற பெயர் வைத்தனர்.

ஒரு வித்தியாசமாக பெயர் வைக்க வேண்டும் என ஆண்ட்ராய்டு நிறுவனமான கூகு்ள் இந்த ஆண்ட்ராய்டு 9.0 தளத்திற்கு “ஆண்ட்ராய்டு pie”என்ற பெயர் வைத்தனர்.

அனைத்திற்கும் ஒவ்வொரு உணவு பெயரை வைத்த கூகுள் நிறுவனம் 2019 வெளியிட்ட ஆண்ட்ராய்டு 10 க்கு வெறும் “ஆண்ட்ராய்டு 10 “என்ற பெயர் மட்டும் வைத்தனர்.

ஜூலை 25 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 11 தளம் வெளியிடப்பட்டது, கடந்த முறை எந்த உணவு பொருள் பெயர் வைக்காததால் அதன் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர்.ஆனால் அதை போக்கும் வகையில் கூகுள் நிறுவனம் “ரெட் வெல்வெட் கேக்”என்ற பெயரை வைத்துள்ளது.


இதுவரை ஆண்ட்ராய்டு போன்களின் தளங்கள் பற்றி பார்த்தீர்கள். இப்போது நீங்கள் பயன் படுத்தும் “ஸ்மார்ட் போன்”எந்த version னில் உள்ளது என்று பாருங்கள்.அப்ப தெரிந்துவிடும் நீங்கள் கையில் வைத்து இருப்பது எந்த கேக் அல்லது சாக்லேட் என.

Exit mobile version