இந்த வருடத்தின் சிறந்த செயலிகளின் பட்டியலை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்!

இந்த வருடத்தின் சிறைந்த 15 செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

சினிமா, தொழில்நுட்பம், வியாபாரம் என தொழில்துறைகள் பலவற்றையும் கட்டி போட்டிருக்கிறது இந்த வருடம். லாக்டெளனில் பலருக்கும் தொழில்நுட்பத்தோடு புது உறவும் இதுவரை இல்லாத ஒரு இணக்கமும் ஏற்பட்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த வருடம் பலரது வாழ்விலும் தொழில்நுட்பம் குறிப்பாக மொபைலும் அதன் செயலிகளும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. அந்த வகையில், இந்த வருடத்தின் சிறந்த 15 செயலிகளின் பட்டியலை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இந்த செயலிகள் பயனாளர்களுக்கு எளிமையாக்கும் விதம், பயன்பாட்டு முறை, முக்கியத்துவம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

READ ALSO- நோக்கியா ஸ்மார்ட் ஃபோனிற்கு அதிரடி விலை குறைப்பு!

அந்த வகையில் சிறந்த ஐபேட் செயலியாக ஜூம் தேர்வாகியுள்ளது. மேலும், சிறந்த மேக் ஆப்பாக ஃபெண்டாஸ்டிகல், சிறந்த ஆப்பிள் டிவி ஆப்பாக டிஸ்னி ப்ளஸ், சிறந்த ஆப்பிள் டிவி கேம்மாக டண்டாரா டிரையல்ஸ் ஆஃப் கேம்மாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version