டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடோஃபோன் – ஐடியா!

தனது டேட்டா ரோல் ஓவர் சலுகையை நீட்டிப்பதாக வி (வோடோஃபோன் – ஐடியா) நிறுவனம் தெரிவித்துள்ளது.

வி நிறுவனம் தனது டேட்டா ரோல் ஓவர் சலுகையை இந்த வரும் ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த சலுகை கடந்த வருடம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு இந்த வருடம் ஜனவரி 17 வரை இருந்தது. ஆனால், இந்த சலுகையை தற்போது வி நிறுவனம் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பதாக தனது அதிகாரப்பூர்வமான வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

ரோல் ஓவர் வசதி ரூ. 249, ரூ. 299, ரூ. 399, ரூ. 449, ரூ. 595, ரூ. 599, ரூ. 699, ரூ. 795 மற்றும் ரூ. 2595 ஆகிய சலுகைகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது அனைத்து சலுகைகளும் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதில் இருமடங்கு டேட்டா, 5 ஜிபி கூடுதல் டேட்டா, ஒரு வருடத்திற்கான ஜீ5 சந்தா வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் வகையில் ரோல் ஓவர் வசதி வழங்கப்பட்டு வந்தது.

READ MORE- அசத்தல் அம்சங்களுடன் நோக்கியாவின் புது ஸ்மார்ட்ஃபோன்!

இந்த சலுகையில் மாற்றம், திரும்ப பெறுவது போன்றவை ட்ராய் விதிப்படி எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்று கொள்ளலாம் எனவும் வி வலைதள பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version