ஜியோ நிறுவனத்துடன் கூட்டணி வைக்க என்ன காரணம் என்பதை ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா ஃப்யூவல் ஃபார் இந்தியா 2020 நிகழ்வு நடந்தது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், ‘ஜியோவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் இந்தியா முழுவது இயங்கி வரும் பல லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளுக்கு உதவியாக இருக்க முடியும்’ என தனது கருத்தினை இதில் மார்க் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘இந்தியாவில் ஆறு கோடிக்கும் அதிகமான சிறு வியாபரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பல லட்சம் மக்களுடைய வேலை வாய்ப்பும் இதில் அடங்கி இருக்கிறது. அப்படி இருக்கும் போது இவர்களுக்கு உதவி செய்வதே ஃபேஸ்புக்கின் முக்கிய மற்றும் முதன்மையான நோக்கம்.
READ MORE- அறிமுகமானது நோக்கியாவின் ஸ்மார்ட்ஃபோன்!
இதற்கு இந்தியாவே சிறந்த இடம்’ எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவில் 9.99 சதவீதம் பங்குகளை வாங்க ரூ. 43,574 கோடி முதலீடு செய்வதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.