சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிய தொடங்கின. தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அதற்கு பதிலளித்துள்ளது.
சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமெரிக்க அரசு வழக்கு பதிந்துள்ளது.
இது ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டாக அதன் பயனாளர்களால் பார்க்கப்படுகிறது. தனது போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுப்பதற்கும், அதற்கு பல்வேறு மறைமுகமாக பல செயல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபடுவதாக அதன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
READ MORE- பிஎஸ்என்எல் வழங்கியிருக்கும் அசத்தல் சேவை!
அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராமை வாங்கியது.
தற்போது இந்த குற்றச்சாடுகளால் அதனை விற்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த புகார்கள் குறித்து பதிலளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், ‘எங்கள் நிறுவனம் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் நல்ல பதில்களை தருவோம்’ என தெரிவித்துள்ளது.