ஃபேஸ்புக்கின் அடுத்த முயற்சி ஸ்மார்ட்வாட்ச் வடிவைமைத்து வருகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சமூக வலைத்தள ஊடகமான ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த வாட்சை அந்நிறுவனம் வடிவமைத்து குறுஞ்செய்தி அனுப்பவும், உடல்நலம் மற்றும் ஃபிட்னெஸ் விவரங்களை டிரேக் செய்யவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் ரியாலிட்டி லேப் பிரிவின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகிறார்களாம். ஃபேஸ்புக் நிறுவனம் தனது சார்பில் ஆப்பிரேட்டிங் சிஸ்டம் ஒன்றையும் கொண்டு வரும் பணியில் கவனம் செலுத்தி வெற்றிகரமாக அறிமுகம் செய்த பிறகு ஃபேஸ்புக் நிறுவன வாட்ச்களில் இயங்குதளம் இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
ரேபான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் கிளாஸ்களையும் ஃபேஸ்புக் கொண்டுவர உள்ள அமெரிக்க டெக்னலாஜி செய்திகளை வெளியிட்டு வரும் தி வெர்ஜ் தெரிவித்துள்ளது.