பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லையெனில் ரூ.1000 அபராத தொகை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லையெனில் ரூ.1000 அபராத தொகை செலுத்த நேரிடும். இந்த இரு ஆவணங்களையும் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதி முடிவடைவதால் உடனடியாக செய்யுங்கள். உங்கள் பான் கார்டை, ஆதார் அட்டையுடன் காலக்கெடுவிற்குள் இணைக்கத் தவறினால், வருமான வரித்துறை உங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடும். ரூ.1,000 அபராதத்தோடு, உங்கள் பான் கார்டும் செல்லாமல் போகும். 2021-ம் ஆண்டின் நிதி மசோதாவை நிறைவேற்றும் போது, மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்க 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் ஒரு புதிய பிரிவை (பிரிவு 234 ஹெச்) இந்திய அரசு இணைத்தது.
வருமான வரித் துறையின் மின் தாக்கல் (e-filing) போர்ட்டலுக்குச் செல்லுங்கள்.
இடதுபுறத்தில் உள்ள ஆதார் பிரிவை க்ளிக் செய்யவும். உங்களது பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை நிரப்ப வேண்டும். CAPTCHA-வை சரியாகக் குறிப்பிடவும். ‘லிங்க் ஆதார்’ என்பதை கிளிக் செய்தால், உங்கள் பான் – ஆதார் இணைப்பு முழுமையடையும். ஐ-டி துறை உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை ஆதார் விவரங்களுடன் சரிபார்க்கும், அதன் பிறகு இணைப்பு செய்யப்படும். வங்கி கணக்கு ஓபன் செய்ய, மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்குகளை வாங்க மற்றும் 50,000-க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் செய்ய போன்ற பல விஷயங்களுக்கு பான் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும்.