கூகுள் சேவைக்கு புதியதாக கட்டணம் விதிப்பு.. பயனாளர்கள் அதிருப்தி

புகைப்படங்களை கூகுளில் பேக்அப் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் என, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

போனில் குறைந்த சேமிப்புத் திறன் கொண்டவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூகுள் போட்டோஸ் ஆப்பில் சேமித்து வைத்து கொள்ளலாம். அந்த வகையில், கூகுள் போட்டோஸில் 4 டிரில்லியன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாகவும். ஒரு வாரத்திற்கு 28 பில்லியன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் புதியதாக சேமிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை இதற்கு கட்டணம் ஏதும் இல்லாத நிலையில், குறிப்பிட்ட அளவு தான் சேமிக்க முடியும் என்று வரம்பும் இந்த அம்சத்திற்கு நிர்ணயிக்கப்படவில்லை.

இந்நிலையில் இலவசமாக இந்த சேவை வழங்குவதால் கூகுள் நிறுவனத்திற்கு இதனால் பெரும் தொகை செலவிட வேண்டி உள்ளதாகக் கூறி, தேவையற்ற செலவுளை குறைக்கும் விதமாக கூகுள் நிறுவனம் இப்போது கூகுள் புகைப்படங்கள் சேவையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

அதன்படி 15ஜிபி வரை கூகுள் போட்டோஸில் புகைப்படங்களை பேக் அப் வைத்துக் கொள்ள எந்த கட்டணமும் கிடையாது. 2021, ஜுன் 1க்கு முன்பு வரை புகைப்படங்கள், வீடியோக்களை சேமித்து வைத்து கொள்ளலாம். அதன் பிறகு 15ஜிபிக்கு அதிகமாக பேக்-அப் வைக்க வேண்டும் என்றால் நம்முடைய தேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். ஜூன் 1, 2021 முதல் இந்த கட்டண முறை நடைமுறைக்கு வந்தால், உங்களின் ஸ்டோரேஜ் திறன் 15 ஜிபிக்கு அருகில் வந்தால் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நினைவூட்டல் வரும். அப்போது தேவைக்கு ஏற்ப கட்டணம் செலுத்தலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.

100ஜிபி ஸ்டோரேஜ் தேவை என்றால் மாதம் ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1300 செலுத்த வேண்டும். இதுபோன்று ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப போட்டோக்களை பேக்அப் வைக்க கட்டணங்களை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version