ஆண்ட்ராய்டு போன்களில் இன்னும் வேகமாகும் பிரவுசரின் செயல்திறன் Google “Freeze dried tabs” அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்க்ரோலிங், சூமிங் மற்றும் லிங்குகளை தட்டுதல் ஆகியவற்றிற்கான ஆதரவைப் பெறும் அதே சமயத்தில், ஸ்கிரீன் ஷாட் அளவுக்கு மட்டுமே சேமிப்பு இடத்தை எடுத்துக்கொள்ளும் என்று நிறுவனம் விளக்கியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டதாவது, “இந்த ஃப்ரீஸ்-டிரைடு டேப்களை நாங்கள் ஸ்டார்ட்-அப்பில் பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில் நீங்கள் பயன்படுத்தும் டேப்கள் பின்னணியில் லோடிங் செய்யப்படும். இது உங்களை விரைவாக உங்களுக்கு தேவையான பக்கங்களை அணுக அனுமதிக்கும்.” என்று தெரிவித்துள்ளது.
கூடுதலாக, ரிசோர்ஸ் எக்ஸ்சாஷான் காரணமாக Android இல் செயலிழப்புகளின் எண்ணிக்கையை Chrome 89 உதவியுடன் குறைக்க முடிந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது மெமரி யூசேஜில் 5% முன்னேற்றம், 7.5% வேகமான ஸ்டார்ட்-அப் டைம்ஸ் மற்றும் 2% ஃபாஸ்டர் பேஜ் லோட்ஸ் ஆகியவை நிகழ்ந்ததாக கூறியுள்ளது. மேலும், எந்த சாதனங்கள் Chrome இன் 64-பிட் வெர்சனை பெறுகின்றன என்பதையும் கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய Android சாதனங்களை (Android Q + மற்றும் 8GB + RAM) உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் Chrome-ஐ 64-பிட் பைனரியாக மீண்டும் உருவாக்கியுள்ளோம். அதில் பேஜ்கள் 8.5% வரை வேகமாக லோடிங் செய்யும் Chrome-ஐ உங்களுக்கு வழங்குகிறோம். அதேபோல ஸ்க்ரோலிங் மற்றும் உள்ளீட்டு தாமதத்திற்கு வரும்போது புதிய அப்டேட் 28% மென்மையானதாக இருக்கும், ” என்று கூகுள் கூறியுள்ளது.
கூகுள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட சுயவிவரங்கள், ரீடிங் லிஸ்ட் மற்றும் டெஸ்க்டாப்பிற்காக Chrome 89 ஐ அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெர்சன்களில் கூகுள் குரோம் பிரவுசரின் செயல்திறன் மற்றும் மெமரி எஃபிசியன்ஷியை மேம்படுத்த Chrome 89-க்கு மேலும் ஒரு புதிய அப்டேட்டை நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் புதுப்பிக்கப்பட்ட பிரவுசர், மெமரியை பயன்படுத்துவதால் மிகச் சிறந்ததாக செயல்படுகிறது. அதாவது முன்புற டேப் தீவிரமாகப் பயன்படுத்தாத மெமரியை நிராகரிப்பதன் மூலம் ஒரு டேபுக்கு 100MiB வரை பிரவுசர் மீட்டெடுக்கிறது. இதனால், பிரவுசரின் லோடிங் ஸ்பீட் அதிகரிக்கும்.