இந்த செயலியை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும் : Google எச்சரிக்கை

இந்த செயலியை உடனே அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என Google எச்சரித்துள்ளது.

உங்கள் Android ஸ்மார்ட்போனில் எக்கச்சக்கமான விளம்பரங்கள், ஆப் பரிந்துரைகள், பொருத்தமற்ற கன்டென்ட்டால் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆப்களை சரிபார்க்க வேண்டிய சரியான நேரம் இதுவாகத்தான் இருக்கே வேண்டும்.

மால்வேர் பைட்ஸ் என்ற பாதுகாப்பு நிறுவனம் தேவையற்ற விளம்பரங்களை காட்சிப்படுத்தும், 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட மிகவும் பிரபலமான ஆப்பைக் கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆப் – பார்கோடு ஸ்கேனர் (Barcode Scanner) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் பார்கோடுகளை ஸ்கேன் செய்து தகவல்களைப் பெற மக்களுக்கு உதவுகிறது. பார்கோடு ஸ்கேனர் ஆப்பில் எந்த சிக்கலும் இல்லை, இது கூகுள் பிளே பாஸ் திட்டத்தில் கூட சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த டிசம்பரில் வெளியான ஒரு புதிய வெர்ஷன், பார்கோடு ஸ்கேனர் ஆப்பை ஆட்வேர் மூலம் பாதித்துள்ளது.

“பயனர்கள் தங்கள் டீபால்ட் ப்ரவுஸரை திறந்ததும் எங்கிருந்து வருகிறது என்று புரியாதவண்ணம் விளம்பரங்கள் வந்து குவிகின்றன” என்று மால்வேர் பைட்ஸ் அதன் பிளாக் போஸ்ட்டில் தெரிவித்துள்ளது. “அனான் 00” என்ற பெயரை கொண்ட பயனர் விளம்பரங்கள் பார்கோடு ஸ்கேனர் என்ற நீண்டகாலமாக நிறுவப்பட்ட ஆப்பில் வருவதைக் கண்டறிந்தார். இந்த ஆப் Google Play இலிருந்து 10,000,000+ நிறுவல்களை பெற்றுள்ளது. கூகுளை எச்சரித்த பிறகு, ப்ளே ஸ்டோரிலிருந்து குறிப்பிட்ட ஆப் அகற்றப்பட்டது. புதிய பயனர்கள் இனி இந்த பயன்பாட்டைப் பதிவிறக்க முடியாது என்றாலும், ஸ்மார்ட்போனில் பார்கோடு ஸ்கேனர் ஆப் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால், தேவையற்ற விளம்பரங்களைப் பார்ப்பதை நிறுத்த, நீங்கள் அதை அன்இன்ட்ஸால் செய்வதே நல்லது.

சில வகையான ஆப் விளம்பரங்களை உள்ளடக்கிய ஆப்பின் குறியீட்டில் ஒரு விளம்பர SDK ஐ சேர்ப்பதன் மூலம் இதைச் செய்கிறார்கள். ஆப்பின் வளர்ச்சியின் முடிவில் செய்கிறார்கள். பெயிட் ஆப்களில் இந்த SDK சேர்க்கப்படுவதில்லை” என்றும் மால்வேர் பைட்ஸ் அதன் பிளாக் போஸ்ட்டில் விளக்கமளித்துள்ளது. இந்த SDK கள் மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறப்படுகின்றன, மேலும் SDK நிறுவனம் அதன் பின்தளத்தில் ஏதாவது மாற்றினால், மெயின் ஆப்பும் பாதிக்கப்படுகிறது, அத பயனர்களுக்கு தேவையில்லாத சிக்கல்ககளை உருவாக்குகிறது.

Exit mobile version