டெக்ஸ்டால் வெர்ஷனுக்குரிய கூகுள் லென்ஸில் டெக்ஸ்டாப் கூகுள் லென்ஸ் வெர்ஷனை கூகுள் நிறுவனம் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் லென்ஸ் மூலம் புகைப்படத்தை தேடுவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் புதியதாக மேம்படுத்தப்பட்டுள்ள கூகுள் லென்ஸ் மூலம் எழுத்துக்களை பதிவிடுவது, மொழிமாற்றம் செய்வது மற்றும் புகைப்படத்தின் உருவாக்க இடத்தை கண்டறிவது உள்ளிட்ட வசதிகளை பெற முடியும்.
இந்த வசதி விண்டோஸ் குரோம், குரோம் ஓ.எஸ் மற்றும் மெக் உள்ளிட்ட ஆப்ரேட்டிங் மென்பொருளில் கிடைக்கும். நீங்கள் டெஸ்டாப் வெர்ஷனுக்குரிய கூகுள் லென்ஸை பயன்படுத்தும் போது. அதில் மேலும் மூன்று தேர்வுகள் வரும்.
உங்களுடைய புகைப்படத்தில் எழுத்துக்கள் இருந்தால், அதை டெக்ஸ்ட் டூல் பயன்படுத்தி கண்டறிய முடியும். அதேபோல, அந்த டெக்ஸ்டை காப்பி செய்து, கேட்கவும் முடியும். மேலும் டெக்ஸ்டை கூகுள் டிரான்ஸ்லேட்டுக்கு மாற்றி, சொற்களுக்குரிய பொருளை தெரிந்துகொள்ளலாம்.
கூகுள் லென்ஸில் மொழியை கண்டறியும் திறன் உள்ளது. நீங்கள் விரும்பும் மொழிக்கு ஏற்றவாறு டெக்ஸ்டுகளை செலக்ட் செய்யும் வசதியும் உள்ளது. காலத்துக்கு ஏற்றவாறு கூகுள் லென்ஸ் பல்வேறு விதமாக மேம்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.