நேற்று மைக்ரோமேக்ஸ் இன் நோட்: 1 அறிமுகமானது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
நேற்று மைக்ரோமேக்ஸ் இன் நோட்: 1 ஃப்ளிப்கார்ட்டில் அறிமுகமானது. In என்ற லோகோவுடன் மீண்டும் மொபைல் சந்தையில் களமிறங்கியுள்ளது மைக்ரோமேக்ஸ்.
இந்தியாவில் மொபைல் சந்தையில் பெரும் எதிர்ப்பார்ப்பே கேமரா மற்றும் டிஸ்பிளேதான். அதனை பூர்த்தி செய்யும் வகையிலேயே 6.67 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
கேமராவில் ப்ரைமரி கேமரா 48 மெகா பிக்சலாகவும், வைல்ட் கேமரா 5 மெகா பிக்சலையும், மேக்ரோ கேமரா 2 மெகா பிக்சல் மற்றும் 2 பிக்சல் டெப்த் சென்சாரையும் இது கொண்டுள்ளது. 64 ஜிபியின் விலை ரூ. 10999 ஆகவும், 128 ஜிபியின் விலை ரூ. 12499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
READ ALSO- இரண்டு நாட்களுக்கு நெட்ஃபிலிக்ஸ் சேவை இலவசம்!
மேலும் பேட்டரி 5000mAh ஆக இருப்பதால் நீண்ட நேரம் சார்ஜ்ஜும் இருக்கும் என்பது கூடுதல் ப்ளஸ்.