இனி போட்டோவையும் ரீல்சாக பதிவிடலாம் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பு காரணமாக, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு தடைவிதித்தது. இதையடுத்து டிக்டாக் பயனாளர்களை ஈர்க்கும் விதமாக, இன்ஸ்டாகிராம் நிறுவனம் ’ரீல்ஸ்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். இந்த நிலையில், விரைவில், புதிய அப்டேட் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அப்டேட்டின்படி, போட்டோக்களை வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம். இதற்கான விதவிதமான டெம்ப்ளேட்டுகளை அந்நிறுவனம் வழங்க உள்ளது. தற்போது, சோதனையில் உள்ள இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரீல்ஸ் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-பா.ஈ.பரசுராமன்.
.