நவம்பர் மாத அறிக்கையின்படி வாய்ஸ்கால் சேவையில் வோடோஃபோன் முன்னிலையில் உள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான டிராய் சிறந்த வாய்ஸ் கால் சேவையை வழங்கிய பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் ஜியோ மற்றும் ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளி வாய்ஸ்கால் சேவையில் வோடோஃபோன் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வோடோஃபோனின் சேவை சிறப்பானதாக உள்ளதாகவும் அதன் பயனாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
பயனாளர்கள் டிராய் இணையதளத்தில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவைகள் குறித்து பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், சிறந்த வாய்ஸ் கால் வசதியை வழங்கியதில் ஐடியா 4.9/5 புள்ளிகளும், வோடோஃபோன் இரண்டாம் இடத்தில் 4.6/5 புள்ளிகளும், பிஎஸ்என்எல் 4.1/5 புள்ளிகள் மற்றும் ஜியோ 3.8/5 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
READ MORE- போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்!
ஆக மொத்தத்தைல் 88.4 சதவீத பயனாளர்கள் திருப்தியான சேவையை பெற்றுள்ளதாக பயனாளர்கள் தெரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.