இன்ஸ்டாகிராம் லைட் செயலி மீண்டும் அறிமுகம்!

இன்ஸ்டாகிராம் லைட் செயலி மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் அதன் ஒரு பகுதியாக, இன்ஸ்டாகிராம் லைட் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இன்ஸ்டாகிராம் லைட் செயலியானது அளவில் குறைவாக அதாவது 2MB-யே உள்ளது. சீராகவும் வேகமாகவும் இயங்கும் வகையில் இருக்கும் இந்த செயலியானது லோ எண்ட் ஸ்மார்ஃபோன்களை குறிவைக்கும் நோக்கில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் லைட்டை தொடர்ந்து தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராம் லைட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். விரைவில் சர்வதேச சந்தையிலும் இது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.

READ MORE- சாம்சங்கின் கேலக்ஸி நோட் சீரிஸ் எப்போது அறிமுகம்?

முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் இது பயனர்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version