ஆப்பிளின் ஐஃபோன் அதில் இருக்கும் ரகசிய அம்சங்கள் குறித்து அப்டேட்டை பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐஃபோனின் ரகசிய அம்சங்கள் குறித்த அப்டேட்டை பயனாளர்களுக்கு தெரிவித்துள்ளது. ஆப்பிளின் ஐஓஎஸ் தளம் ஐஃபோன் பயன்படுத்துபவருக்கு ரிமைண்டர், காலண்டர், நோட்ஸ் என சிலவற்றை வழங்கி வருகிறது.
பெரும்பாலான ஐஃபோன் பயனாளர்கள் ஆப்பிளின் ஹிடன் (Hidden) அம்சங்களை உபயோகிக்க தவறி விடுகின்றனர். அந்த வகையில் ஐஃபோனின் கால்குலேட்டரில் ஹிடன் அம்சங்கள் இருப்பதை தெரிவித்துள்ளது ஐஃபோன்.
அந்த வகையில் ஐஃபோன் கால்குலேட்டரில் அறிவியல் கால்குலேட்டர் அம்சம் மறைக்கப்படு இருக்கிறது. இதனை ஆக்டிவேட் செய்ய கால்குலேட்டர் செயலிக்குள் நுழைந்த பிறகு அதனை கிடைமட்டமாக வைக்கும் போது அறிவியல் கால்குலேட்டர் ஆக்டிவேட் ஆகும் என தெரிகிறது.
READ MORE- பிஎஸ்என்எல் அறிவித்துள்ள குறைந்த விலை சலுகை!
டில்ட் அம்சத்தை ஆஃப் செய்து வைத்திருப்பவர்கள், கண்ட்ரோல் செண்ட்டரில் இருந்து போர்ட்ரேய்ட் ஓரியண்டேஷன் லாக் அம்சத்தை லாக் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.