அப்படி போடு.. வெறும் மூவாயிரம் ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட் போன்.. ஜியோவின் அடுத்த அதிரடி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போனை, மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவன வருகையால், முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. கொள்ளை லாபம் சந்தித்து வந்த வோடாபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஜியோ வாரிக் கொடுத்த சலுகைகள் காரணமாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்தன. இந்த சூழலில், அடுத்த இலக்காக மலிவான விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, 1500 ரூபாயை வைப்புத் தொகையாக மட்டும் பெற்று, ஜியோ நிறுவனம் 4ஜி போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ரூ.5000 குறைவான மலிவான விலையில் 5ஜி போன்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 43-வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில், அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி பேசியிருந்தார். அப்போது, 2ஜி இணைப்புகள் இல்லாத இந்தியாவை ஆக்குவதாக கூறினார்.

5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியர்கள் காத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் 2ஜி அம்ச தொலைபேசியை பயன்படுத்தும் சுமார் 30 கோடி இந்தியர்கள் மலிவு விலை ஸ்மார்ட்போனுக்கு இடம்பெயரும் நடவடிக்கையை நாம் துரிதப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, ஜியோ நிறுவனம் அடுத்த வெளியிட உள்ள 5ஜி செல்போன்களின் விலை ரூ.2,500 முதல் ரூ.3000 வரை இருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version