Micromax In 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : எதிர்பார்த்திராத சிறப்பம்சங்கள்…!!

Micromax In 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது.

இந்த மொபைலானது 4GB ரேம் + 64GB உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 6Gb ரேம் + 128GB உள்ளடங்கிய சேமிப்பு ஆகிய இருவேறு வேரியண்ட்டுகளில் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படை மாடலின் விலை ரூ. 10,499 ஆகவும், டாப் மாடலின் விலை ரூ. 11,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைலானது மார்ச் 26ம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் தளத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ. 9,999க்கும் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.11,499க்கும் கிடைக்க உள்ளது.

மூன்று பின்புற கேமரா மற்றும் முன்புறம் செல்ஃபிக்கென ஒரு துளை-பஞ்ச் கட் அவுட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 6.67 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி + (1,080 எக்ஸ், 2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அண்ட்ராய்டு 10 ஓஎஸ் இயங்குதளத்தில் வெளியாகும் இந்த மொபைல் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் ஆண்ட்ராய்டு 11 க்கு மேம்படுத்த நிறுவனம் உறுதியளிக்கிறது.

எஸ்.டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவுபடுத்தப்படும். 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (f/ 1.79 லென்ஸ்), மேலும் 2 எம்பி டெப்த்சென்சார், சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மெக்ரோ கேமராவுடனும், முன்பக்கத்தில், 8மெகாபிக்சல் செல்பி கேமரா 4.6 மிமீ விட்டம் கொண்ட துளை-பஞ்ச் கட் அவுட் கொண்டுள்ளது. சார்ஜிங்க்காக 18W பார்ஸ்ட் சார்ஜிங் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உடன் வருகிறது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

Exit mobile version