சாம்சங்கின் கேலக்ஸி ஏ22 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்ஃபோன் விவரங்கள் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் ஏ22 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்கள் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் ஜூன் மாதத்திற்கு பிறகு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக இந்தியா மற்றும் இதர தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு சந்தையில் அறிமுகமான ஏ21 சீரிஸ்ஸின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனே ஏ22 சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஏ32 5ஜி வெர்ஷனையும் கேலக்ஸி அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஏ22 சீரிஸ் ஸ்மார்ஃபோனானது ஓப்போ, சியோமி போன்றவற்றின் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சந்தையில் போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
READ MORE- இந்த ஆண்டின் டாப்10 செயலிகள் என்னென்ன?
மேலும் இதன் விலை ரூ. 15,000 வரை நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது. இதன் சிறப்பம்சங்கள் மீடியா டெக் டிமென்சிட்டி 700 பிராஸசர் மற்றும் மூன்று பிரைமரி கேமரா ஆகியவை இருக்கும்.