ரூ.6999 க்கு சாம்சங் கேலக்ஸி M02 அறிமுகம் : பிப்.9 முதல் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எம் 02 மாடல் இந்தியாவில் அறிமுகமானது. இது வருகிற பிப்ரவரி 9 முதல் அமேசான் வழியாக விற்பனைக்கு வருகிறது. அதிகாரபூர்வமான அறிவிப்புக்கு பிறகு சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.6,999 க்கு அறிமுகமாகி உள்ளது. அறிமுக சலுகையாக இது ரூ.6,799 க்கு (அமேசானில் தயாரிப்பு பக்கத்தின்படி) வாங்க கிடைக்கிறது. ஸ்மார்ட்போனில் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பமும் உள்ளது, கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும். அமேசான், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் முன்னணி ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வருகிற பிப்ரவரி 9 முதல் விற்பனைக்கு வரும்.
டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ மூலம் இயங்குகிறது. 6.5 இன்ச் அளவிலான எச்டி + இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 3 ஜிபி வரை ரேம் உடன் மீடியா டெக் எஸ்ஓசி உடன் வருகிறது. 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கம் செய்யும் ஆதரவும் உள்ளது.
ஸ்டாண்டர்ட் 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. அளவீட்டில் இது 9.1 மிமீ தடிமன் மற்றும் 206 கிராம் எடையும் கொண்டுள்ளது.