சாம்சங் கேலக்ஸி எஸ் 20 விற்பனை திடீர் நிறுத்தம்?

இந்திய சந்தையில் சாம்சங்க் கேலக்ஸி எஸ் 20 விற்பனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 விற்பனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன் சர்வதேச சந்தையில் அறிமுக படுத்தப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 69,999 என தொடங்குகிறது. புதிய சீரிஸ்ஸின் அறிமுகத்தை தொடர்ந்து சாம்சங் தனது எஸ் 20 விற்பனையை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

READ MORE- போக்கோ எக்ஸ்3-யின் அதிரடி விலை குறைப்பு!

இதுமட்டுமில்லாமல், சாம்சங் எஸ்20, சாம்சங் எஸ் 20 பிளஸ், சாம்சங் அல்ட்ரா போன்றவற்றின் விற்பனை முடிந்து விட்டதாகவும் இந்திய சீன சாம்சங் வலைதள பக்கங்களிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சாம்சங்கின் வலைதள பக்கத்தில் கேலக்ஸி எஸ்20 எஃப்இ மட்டுமே விற்பனைக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version