சாம்சங் நிறுவனம் கேமரா சென்சாரில் புதிய பாய்ச்சலாக 600 எம்பி சென்சாருக்கான திட்டத்தை செயல்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங்க் நிறுவனம் கேமரா சென்சாரில் அடுத்த கட்ட பாய்ச்சலாக இனி தங்கள் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஃபோனில் அதிகபட்சமாக 600 எம்பி உள்ள கேமராக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுவரை வெளியான ஸ்மார்ட்ஃபோன்களில் அதிகபட்சமாக 108 எம்பி சென்சார் உள்ளது. எனவே, சாம்சங்கின் இந்த திட்டம் என்பது கேமரா சென்சாரில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
பல்வேறு தடைகளை கடந்து 600 எம்பி சென்சாரில் 4கே மற்றும் 8கே ரெக்கார்ட்டிங்கில் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சாம்சங்கின் இந்த சென்சார் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சாம்சங்கின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா ஸ்மார்ட் ஃபோன்களில் 108 எம்பி கேமரா சென்சார் உள்ளது.
READ MORE- நோக்கியா பியூர் புக் வெளியீடு அப்டேட்!
இதனால் சாம்சங்கின் அடுத்த தலைமுறை மாடல்களில் 600 எம்பி சென்சார் கேமரா வருவது குறித்தான கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில் சாம்சங்கிடம் இருந்து இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்.