சாம்சங் நிறுவனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி சாதனங்களில் மேம்படுத்தப்பட்ட கேமிங் அனுபவத்திற்காக புது செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி சாதங்களில் மேம்படுத்தப்பட்ட கேமிங் அனுபவத்திற்காக புது செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கேம் டிரைவர் எனும் இந்த புது செயலில் சாம்சங் சாதனங்களில் இதன் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்20, நோட் 20 பயன்படுத்தும் பயனாளர்கள் கேலக்ஸி சாம்சங் ஸ்டோரில் கேம் டிரைவர் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த கேம் டிரைவர் செயலி கூகுள், குவால்காம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட இருக்கிறது. மொபைல் கேமர்களுக்கு சிறப்பானதொரு அனுபவத்தை வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு உள்ளது.
READ MORE- ஐஃபோன்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் அமேசான்!
தற்போதைக்கு கால் ஆப் ட்யூட்டி மொபைல் மற்றும் போர்நைட் போன்ற கேம்களை கேம் டிரைவர் செயலி சப்போர்ட் செய்கிறது. கிராஃபிக்ஸ் திறனை மேம்படுத்தி மொபைல் கேமர்களுக்கு இந்த செயலி சிறந்ததொரு அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.