சியோமி ஸ்மார்ட் கிளாஸ் : ஸ்மார்ட்போன்கள் ஓரங்கட்டப்படும்

சியோமி ஸ்மார்ட் கிளாஸ் தயாரிப்பினால் ஸ்மார்ட்போன்கள் ஓரங்கட்டப்படும்.

சியோமி நிறுவனத்தின் புதிய காப்புரிமையானது, இந்நிறுவனம் எதிர்காலத்தில் ஸ்மார்ட் கிளாஸ்களை தயாரிக்கலாம் என்றும், அது மருத்துவம் சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் கூறுகிறது. சியோமி நிறுவனம் சமீபத்தில் புதிய காப்புரிமையை (Patent) தாக்கல் செய்துள்ளது, பேடண்ட் எதிர்காலத்தில் இந்நிறுவனம் தனது சொந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை தயாரிக்கும் என்று தெரிவிக்கிறது. புதிய கண்ணாடிகள் வழக்கமான ஸ்மார்ட் கிளாஸ் அம்சங்களைத் தவிர சில புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும். இவற்றில் 4டி டிடெக்ஷன் மற்றும் Therapeutic signal emitter ஆகியவைகளும் அடங்கும்.

ஐ.டி ஹோம் (IT Home) வழியாக வெளியான புதிய அறிக்கையின்படி, சியோமி ஸ்மார்ட் கிளாஸின் புதிய Therapeutic signal emitter அம்சமானது ஒளிக்கதிர் சிகிச்சைக்கான திறன் கொண்டதாக இருக்கும். இந்த அம்சம் மூளை சார்ந்த நோய்களுக்கு “சிகிச்சையளிக்க” சியோமி ஸ்மார்ட் கண்ணாடிகளை அனுமதிக்கும். உடன் மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற மன நிலைகளுக்கும் மற்றும் கண் சோர்விற்கும் கூட “சிகிச்சையளிக்கும்” வெளிப்படும் ஒளி சமிக்ஞைகளில் ultraviolet, infrared, laser மற்றும் visible light signals இருக்கலாம் என்று வெளியான அறிக்கை குறிப்பிடுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கேஜெட்டுகள் உட்பட பல காப்புரிமைகளும் இன்னும் இறுதி தயாரிப்பாக உருமாறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்கும் முதல் பிராண்ட் சியோமி அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற “முதல் தயாரிப்புகளை” தயாரிப்பதற்கான பாதையில் இருப்பதாக கூறப்படுகிறது. பேஸ்புக் கூட ஒரு ஜோடி ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்குகிறது. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் ஒரு நாள் ஸ்மார்ட்போன்களை ஓரங்கட்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Exit mobile version