குறைந்த விலையில் சவுண்ட் ஒன் இயர்பட்ஸ் அறிமுகம்!

சவுண்ட் ஒன் நிறுவனத்தின் குறைந்த விலையிலான இயர்பட்ஸ் சாதனம் அறிமுகமாகியுள்ளது.

சவுண்ட் ஒன் நிறுவனத்தின் குறைந்த விலையிலான இயர்பட்ஸ் சாதனம் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

எக்ஸ்90 வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலான இதில் ப்ளூடூத் 5, ஹைஃபை ஆடியோ, இன்-லைன் கண்ட்ரோல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய இயர்பட்ஸ் நல்ல தரமான ஏபிஎஸ் ஹவுசிங்கை கொண்டுள்ளது.

மேலும் மைக்ரோ ஊபர் இருப்பதால் நல்ல தரமான ஆடியோ குவாலிட்டியும் கிடைக்கிறது. காதுகளில் அணிந்திருக்கும் போது வசதியான அனுபவத்தை தருகிறது. இதில் ப்ளூடூத் 5 இருப்பதால், சீரான இணைப்பு கிடைக்கிறது.

READ MORE- ரியல் மீ வாட்ச் எஸ் சீரிஸ் அறிமுகம்!

இன்-லைன் கண்ட்ரோல் இருப்பதால் நேரடி மியூசிக் ப்ளேபேக் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட்டெண்ட் வசதியும் உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 25 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டது. இதன் விலை ரூ. 890 என அமேசான் தளங்களில் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version