Netflix -ஐ இலவசமாக பயன்படுத்த சூப்பரான ஐடியா : பெஸ்ட் பிளான்கள்..!!

Netflix -ஐ இலவசமாக பயன்படுத்த சூப்பரான ஐடியா பெஸ்ட் பிளான்கள் வெளியாகியுள்ளது.

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் விஐ உள்ளிட்ட நிறுவனங்களின் ரீச்சார்ஜ் பிளான்களை சரியாக தேர்தெடுப்பது மூலம் நெட்பிளிக்ஸ் வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

ஜியோவின் போஸ்ட் பெய்ட் பிளான் 399 ரூபாயில் தொடங்கி 1, 499 ரூபாய் வரை இருக்கிறது. 399 ரூபாய் ஃபிளானில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ், 75 ஜிபி டேட்டா ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம். 599 ரூபாய் பிளானில் 100 ஜபி டேட்டாவுடன், கூடுதலாக ஜியோ குழும சலுகைகள் வழங்கப்படுகிறது. 799 ரூபாய் பிளானில் 150 ஜிபி டேட்டாவும், 899 ரூபாய் பிளானில் 200 ஜபி டேட்டாவும், அதனுடன் ஜியோ குழும சலுகைகள் வழங்கப்படுகின்றன. 1499 ரூபாய் போஸ்ட் பெய்ட் ஃப்ளானில் 300 ஜிபி டேட்டாவுடன், 500 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வசதி, அன்லிமிட்டெட் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் வசதிகள் கொடுக்கப்படுகின்றன. கூடுதலாக நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்சன்கள் வழக்கப்படுகின்றன.

ஜியோ பைபர் திட்டத்தில் ஆன்லைன் பல்வேறு வீடியோ தளங்களுக்கான சலுகைகள் வழங்கப்படுகின்றன. 1499 ரூபாய் திட்டத்தில், நெட்பிளிக்ஸ் வீடியோ தளத்துக்காக 499 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 2,499 ரூபாய் திட்டத்தில் 649 ரூபாய் நெட்பிளிக்ஸ் சேவைக்காக ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம். இதேபோல், 3,999 மற்றும் 8,499 ரூபாய் திட்டங்களில் நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்டு மற்றும் நெட்பிளிக்ஸ் பிரீமியம் சப்ஸ்கிரிப்சன்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றன

தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடாஃபோன் ஐடியா, நெட்பிளிக்ஸ் இலவச சப்ஸ்கிரிப்சனை வழங்குகிறது. போஸ்ட்பெய் பிளஸ் 1099 ரூபாய் திட்டம் ZEE5 பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோவுக்கு ஒரு வருட இலவச சந்தாவை வழங்குகிறது. நெட்பிளிக்ஸ் அடிப்படையில் நான்கு விதமான ரீச்சார்ஜ் பிளான்களை வைத்துள்ளது. ஒரே ஒரு திரைக்கான SD ரெசல்யூசன்ஸ் திட்டத்தில் மாதம் 199 ரூபாயும், ஆண்டுக்கு 2,388 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மற்றொரு எஸ்.டி திட்டத்தில் மாதம் 499 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 5,988 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இரண்டு திரைக்கான FHD ரெசல்யூசன் திட்டம் மாதம் 649 ரூபாய்க்கும், ஆண்டுக்கு 7,788 ரூபாய்க்கும் கொடுக்கப்படுகிறது. 4 திரைக்களுக்கான UHD ரெசல்யூசன் திட்டம் மாதம் 799 ரூபாய்க்கும், ஆண்டுக்கு 9, 588 ரூபாய்க்கும் கொடுக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ரீச்சார்ஜ் திட்டத்தை தெளிவாக பார்த்து ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம்.

Exit mobile version