கடந்த மாதம் வாட்ஸ் அப் விட 6.3 கோடி பதிவிறக்கம் செய்யப்பட்ட டெலிகிராம் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளது.
செயலிகள் பதிவிறக்கத்தை கண்காணிக்கும் சென்சார் டவர் என்ற அமைப்பு கடந்த மாதம் அதிகளவில் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது தனியுரிமை கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வரப்போவதாக அறிவித்தது.
அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மொபைலில் இனி வாட்ஸ் அப் செயல்படாது என அறிவித்தது. பயனர்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு பல பயனர்களும் மாறத்தொடங்கினர்.
டெலிகிராம் செயலியானது கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 6 கோடியே 30 லட்சம் டவுன்லோடுகளை பெற்றுள்ளது. இதில் அதிகப்படியாக இந்தியாவில் 24 சதவிதமும், இந்தோனேசியாவில் 10 சதவீதமும் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.