பப்ஜி மொபைல் இந்தியாவுக்கும் தடை விதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு பயனர்களின் தனிப்பட்ட தகவல் திருட்டு மற்றும் பாதுகாப்பு கருதி மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இதனையடுத்து டிக்டாக்கிற்கு மாற்றாக ரீல் மற்றும் பல செயலிகளும் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் பப்ஜிக்கு மாற்றாக ஃபாஜி மற்றும் பப்ஜி மொபைல் இந்தியா அறிமுகப்படுத்தப்படும் என சொல்லப்பட்டிருந்தது.
READ MORE- ஒன்பிளஸ்ஸின் பட்ஸ் இசட் இந்தியாவில் அறிமுகம்!
ஆனால், தற்போது டிக்டாக்கிற்கு நிரந்தர தடை விதித்தது போலவே பப்ஜி மொபைல் இந்தியாவிற்கும் நிரந்த தடை இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.